மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில், சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.சி.பி. வசந்த குமார தெரிவித்தார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவ தினமான நேற்று இரவு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சுவரணையடி பிரதேசத்தில் வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன், வீட்டின் உரிமையாளரை பொலிசார் கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.