ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்: சிவநேசதுறை சந்திரகாந்தன்

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்தால் ரணில் விக்கிரமசிங்க வயசானாலும் மீண்டும் ஒருமுறை வர வேண்டும் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சனையும் கிடையாது நான் அவருக்கு எதிராகத்தான் வாக்கு அளிக்க வேண்டியவன் ஏனென்றால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் அவர் என்னை சிறையில் அடைத்ததில் பிரதான பங்கு வகிப்பவர் இருப்பினும் தனிப்பட்ட வெறுப்பு விருப்புக்கு அப்பால் அரசியல் செய்ய முடியாது

யார் இந்த நாட்டை முன்னுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழர்களின் பிரச்சனையை ஓரளவேனும் விளங்கிக் கொண்டவர்கள் தமிழர்களின் பிரச்சனையை மேலும் இழுத்துக் கொண்டு செல்ல முடியாது.

கிழக்கு மாகாணம் வறுமையுடைய மாகாணம் என்பதை அவர் உணர்ந்து உள்ளார் அதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அபிவிருத்தியின் மூலம் உற்பத்தி துறையின் சக்தி மிக்கவர்களாக நாம் மாற வேண்டும். நாட்டை முதலில் கட்டி எழுப்புவதை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அதை வேலை வறுமையான மக்கள் தற்போதைய நிலைப்பாடு என்பதையும் சிந்திக்க வேண்டும்.

எனவே நாம் ஒன்றுபட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் தான் சர்வதேச மற்றும் நாட்டின் சவால்களை வெல்ல முடியும் என

ராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தன் என்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்