அரச பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து

 

இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்