மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து: வயோதிப பெண் பலி

-மன்னார் நிருபர்-

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் வயோதிபபெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என தெரிய வருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்