இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 104 புதிய ‘ஃபோட்டான் மெட்ரோ’ (FOTON Metro) ரக பேருந்துகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள ஃபோட்டான் உற்பத்தித் தொழிற்சாலையில் இந்த பேருந்துகளை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.
இதில் லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (Lanka Metro Transit) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேருந்துகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இலங்கை முழுவதும் நவீனமயமாக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கு இந்த பேருந்துகள் பெரிதும் பங்களிக்கும் என லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய பேருந்துகளின் வருகையானது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய மைல்கல் என விவரித்துள்ள அந்த நிறுவனம், பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கு அனைத்துப் பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.