Sri Lanka Tamil News Site

குளிர்கால பிரச்சனைகளுக்கு உதவும் உணவுகள்

- Advertisement -

குளிர்கால நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உணவின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். அந்த வகையில் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய 5 உணவுகளை பார்க்கலாம். இவை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

இஞ்சி : இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது. அதோடு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் குளிர்கால தொற்றுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள இஞ்சி சிறந்த வீட்டு மருந்தாகும். எனவே உணவில் சேர்ப்பது மட்டுமல்லாமல் தேநீர் போடும்போதும் இஞ்சி சேர்க்கலாம்.

மஞ்சள் : மஞ்சளின் மகத்துவத்தை அனைவரும் அறிவார்கள். இதன் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் குளிர்கால பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். எனவே அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

துளசி : துளசி குளிர்காலத்திற்கு மிகவும் அவசியமான அதிமருந்து. ஏனெனில் குளிர்கால சுவாசப்பிரச்சனை, நுரையீரல் ஆரோக்கியத்திற்கு துளசி பயனுள்ளதாக இருக்கும். எனவே தினமும் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள் அல்லது கொதிக்க வைத்து பானமாகவும் அருந்தலாம்.

பாதாம் : உடலுக்கு அத்தியாவசிய தேவையான மெக்னீசியம், புரோட்டீன் , ரிபோப்ளேவின் , ஸிங்க் , வைட்டமின் ஈ என பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே தினமும் 3 பாதாம் ஊற வைத்தோ அல்லது அரைத்து பாதாம் பாலாகவோ பருக நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

பூண்டு : நோய் தொற்று கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. பூண்டில் வைட்டமின் சி, பி, ஃபோலேட் மற்றும் ஸிங்க் போன்ற பண்புகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். எனவே சளி , இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் பூண்டு உதவும்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!