கொழும்பில் 129 மி.மீ மழை பதிவாகியுள்ளது என , வானிலை ஆய்வுத் துறையின் வெள்ளிக்கிழமை மாலை வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில மணி நேரங்களில் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது, மேலும் மாலை நேர பரபரப்பின் போது தலைநகர் முழுவதும் போக்குவரத்து மிகவும் மெதுவாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.
இந்த 129 மி.மீ என்பது வானிலை ஆய்வுத் துறையின் கொழும்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட அளவீடு ஆகும், எனவே நகரின் எல்லாப் பகுதிகளிலும் இதே அளவு மழை பெய்திருக்காது சில பகுதிகளில் அதிக மழையும், ஏனைய பகுதிகளில் குறைவான மழையும் பெய்திருக்க வாய்ப்புக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
129 மி.மீ மழை என்பது நகரின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 129 லீட்டர் மழை பெய்துள்ளது என்பதாகும். இது ஒரு சிறிய குளியலறை ஆறரை தொட்டியில் 20 லீட்டர் தண்ணீர் கேன்கள் கொட்டப்பட்டதற்குச் சமம்.
1 மி.மீ மழை என்பது எவ்வளவு தண்ணீர்?
ஒரு மில்லிமீற்றர் மழை என்பது ஒரு சதுர மீற்றர் தரையில் பெய்யும் ஒரு லீட்டர் தண்ணீருக்குச் சமம். மழைப்பொழிவு என்பது ஆழத்தைக் கொண்டு அளக்கப்படுகிறது.
பெய்யும் நீர் வடிந்து செல்லாமலோ அல்லது மண்ணில் ஊறிச் செல்லாமலோ இருந்தால், சமதள நிலத்தில் நீர் எவ்வளவு உயரத்திற்குத் தேங்கி நிற்கும் என்பதைக் கொண்டு. வானிலை ஆய்வுத் துறை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிடும் போதெல்லாம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு விதி.










