கேகாலை உள்ளக விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுகிழமை நடை பெற்ற தேசிய சுமோ மல்யுத்த போட்டிகளில் பயிற்றுவிப்பாளர் சு.திபாகரன் தலைமையிலான Batti empire sports club கழக அணியினர் கலந்து கொண்டு தங்கம்-3, வெள்ளி-3, வெண்கலம் -2 உள்ளடங்களாக 8 பதக்கங்களை பெற்று கழகத்திற்கும் மட்டக்களப்பு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
குறிப்பாக இம்முறை Batti empire sports club கழக வீர வீரர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி (Gல்ld-T), மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி (Gல்ld-T,Silver-1), மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி(Sīiv-1) ஆகிய பாடசாலைகளை பிரதிநிதித்துவபடுத்தி முறையே தங்கம் 2, வெள்ளி -2 உட்பட மொத்தமாக 4 பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதற் தடவையாக இம்முறை பாடசாலைகளை கலந்து கொள்ள செய்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் மேலும் பல பாடசாலைகளை இணைத்து போட்டிகளில் கலந்து கொள்ள கழகம் உத்தேசித்துள்ளதாகவும் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் எனவும் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.