Sri Lanka Tamil News Site

மது பாவனை குறைந்துள்ள போதிலும் வருமானம் வேகமாக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் மது பாவனை குறைந்துள்ள போதிலும் கலால் திணைக்களத்தின் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதன் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் உள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மதுபானங்கள் மீதான வரியை எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் அரசு வசூலிக்க முடியும்.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.

பல்வேறு காரணங்களால் மதுபானத்தின் தேவை சுமார் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தரவுகளின் படி நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -