Sri Lanka Tamil News Site

விபத்தில் தாதியர் உத்தியோகத்தர் பலி : ஆசிரியை படுகாயம்

- Advertisement -

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் வைத்தியசாலையின் தாதியரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சம்பவம் குறித்து தெரிய வருகையில்,

மோட்டார் சைக்கிளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாதியர் உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காக சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த, குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதியர் உத்தியோகத்தரான எஸ்.கீதாஞ்சனா தேவி (44வயது) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், அவருடன் பயணித்த அவரது மூத்த சகோதரியான ஆசிரியை படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

- Advertisement -