முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

-யாழ் நிருபர்-

காங்கேசன்துறை – தாவடிச்சந்தியில் நேற்று சனிக்கிழமை முச்சக்கரவண்டி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.