முதல்நாள் பரீட்சையில் தோற்றிய மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கம்பஹாவில் க.பொ.த சாதரணதர பரீட்சையின் முதல் நாள் பரீட்சையில் தோற்றிய மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் .

ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளான்.

குறித்த மாணவர் வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாணவன் தனது அறையில்  தற்கொலை செய்துகொண்டதாகவும் அதனைப் பார்த்த அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை பொலிஸார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்