வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியினை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்