15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சிறுவனொருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளதுடன் நீதிமன்ற விசாரணைகளையடுத்து சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்