Snapchat மற்றும் facebook ஆகியவையும், இலங்கையர்களும்
இலங்கையில் மிகக் குறைவானவர்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றாக Snapchat காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் கடந்த 2024 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான ஆணைக்குழுவின் தரவுகளின்படி, Snapchat பயனர்களின் எண்ணிக்கை நாற்பது இலட்சத்து 12,121 ஆகும்.
அத்தோடு, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பயன்படுத்தப்படும் சமூக ஊடக வலையமைப்பாக facebook காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
