Sri Lanka Tamil News Site

சுவிஸ் வங்கிகளிலுள்ள இந்தியர்களின் சேமிப்பு அதிகரிப்பு

- Advertisement -

சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு பணம் ஒரே ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்புகள் தொடர்பான விபரங்களை சுவிட்ஸர்லாந்து அரசு ஆண்டுதோறும் வெளியிடுவது வழமை.

அந்த வகையில், கடந்த ஆண்டு நிலவரம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 30,500 கோடி இந்திய ரூபாவிற்கும் அதிக பணத்தை சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் சேமித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டில் இந்தத் தொகை 20,700 கோடி இந்திய ரூபாவாக காணப்பட்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, சுமார் 10 ஆயிரம் கோடி இந்திய ரூபாவினால் அது அதிகரித்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இத்தொகை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!