சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
பெர்ன் மாநிலத்தில் ஓக்லன்பெர்க் நகராட்சியில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதாக பெர்ன் மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை கிடைத்துள்ள தகவல்களின்படி, விமானி டுப்பெந்தால் அருகே உள்ள ஒரு புல்வெளியில் விமானம் விழுந்துள்ளது உடனடியாக அனுப்பப்பட்ட அவசரகால மீட்புக் குழுவினரால், சம்பவ இடத்திலேயே விமானியின் மரணத்தை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்ததுள்ளது.
உயிரிழந்தவர், சோலோதூர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 64 வயது சுவிஸ் குடிமகன் என தெரியவந்துள்ளது.
பெர்ன் மாநில ரோந்துப் பிரிவுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தன.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை , தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், சுவிஸ் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை வாரியத்துடன்(SUST) ஒருங்கிணைந்து பெர்ன் மாநில பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.