கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பச்சை வழித்தடத்தின் ஊடாகச் சென்றுகொண்டிருந்த 38 மற்றும் 41 வயதுடைய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறித்த இருவரும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இரவு சுமார் 10.01 மணியளவில் AK 47 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டுவந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 பெட்டிகளில் அடங்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுங்கத் திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தையும் அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.










