கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை மாவட்டம் ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை இடியுடன் கூடிய மழையின்போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் சில இடங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் வீடுகள் அல்லது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சமடையுமாறும், மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. துவிச்சக்கரவண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களிலிருந்து விலகியிருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற ஆபத்துகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.











