54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

ஹம்பஹாவில் 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவனகல நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின்   அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

Shanakiya Rasaputhiran

இந்த சுற்றிவளைப்பில் வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்ரிக் கொள்கலன்களில் மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad