5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கொழும்பு பாமன்கடை பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்