திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










