2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 60 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கவில்லை.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதனையடுத்து, நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், ஏழு நாட்கள் இடம்பெற்ற நிலையில் இன்று நிறைவடைந்தது.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகி, டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.









