அஹுங்கல்ல பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர், அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியைச் சேர்ந்த லியனகே தினேஷ் சுரங்க (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அஹுங்கல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591485 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தை 091-2264026 என்ற இலக்கத்திலோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.









