மஸ்கெலியா புனித ஜோசப் தேசியக் கல்லூரியைச் சேர்ந்த குறைந்தது 36 மாணவர்கள் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும் 96 மாணவர்கள் இன்று காலை சுமார் 8.45 மணியளவில் காலை உணவை உட்கொண்ட பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தபோது, அவர்களில் சுமார் 36 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைத் தகவல்களின்படி, சிகிச்சை பெற்ற 30 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அதேவேளை, இரண்டு மாணவர்களும் மூன்று மாணவிகளும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.










