-ச.சந்திரபிரகாஷ்-
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காணவில்லை என தெரிவித்து அவரது தயார் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் புன்னைக்குடா சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த சசிகரன் சஞ்யுதா (வயது-19) என்பரே கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
வாழைச்சேனையில் உள்ள பாடசாலை விடுதி ஒன்றில் தங்கியிருந்து 11 ஆம் ஆண்டு வரை கல்வி கற்று வந்த இவர், பாடசாலை கல்வியை இடைநடுவே நிறுத்திவிட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தான் சமயவழிபாட்டிற்காக, செங்கலடிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் மின்சார விளக்குகள் போடப்பட்டும் மற்றும் கதவுகள் திறந்திருந்த நிலையில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தயார் தெரிவித்தார்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு ஆராய்ந்து பார்த்த போது இவர் இரவு 7.45 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் செல்லும் காட்சிகள் மட்டும் பதிவாகியுள்ளதாகவும், தனது மகளுக்கு அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை தாயார் தெரிவித்தார்.
மேலும் மகளின் பாவனையில் இருந்த கையடக்க தொலைபேசியும் காணாமல் போன தினத்தில் இருந்து செயழிந்து போயுள்ளதாகவும் தயார் தெரிவித்தார்.
தனது மகள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், அல்லது அவரை எங்காவது கண்டால் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு தாயார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளார்.
குறித்த யுவதி தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0755106546 அல்லது 0750615620 என்ற கையடக்க தொலைபேசிக்கு அல்லது ஏறாவூர் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு தாயார் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










