மொனராகலை, உனகந்த வனப் பாதுகாப்புப் பகுதியில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் சுற்றிவளைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மொனராகலை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சுமார் மூன்று அடி உயரம் கொண்ட 2,100 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த குறித்த கஞ்சா செடிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றைப் பயிரிட்டதாகக் கருதப்படும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










