வாழைச்சேனை நகர் லயன்ஸ் கழகத்தினால், வாழைச்சேனை – விநாயகபுரம் பகுதியில் பெண் தலைமை தாங்கும் இரண்டு பெண் பிள்ளைகளை உடைய குடும்பத்திற்கு கட்டப்பட்ட வீடு இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை நகர் லயன்ஸ் கழக தலைவர் செ.யோகராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 306 D10 மாவட்ட முன்னாள் ஆளுநர் யோகேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீட்டை பயனாளி குடும்பத்தினரிடம் கையளித்ததுடன், இதன்போது லயன்ஸ் கழகத்தின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டு பெண் பிள்ளைகளுடன், வீட்டு வசதிகள் இன்றியும் மழை காலங்களில் தூக்கம் இன்றியும் சிரமப்பட்டு வந்த குடும்பத்திற்கு இந்த வீடு கட்டி கையளிக்கப்பட்டது.
வீட்டை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், வாழைச்சேனை நகர் லயன்ஸ் கழகத்தினருக்கும் , முன்னாள் ஆளுநருக்கும், வீட்டினை கட்டி கொடுப்பதற்காக நிதி பங்களிப்பினை செய்த லயன் அருமை சேகரம் பசில்ராஜாவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.










