2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் 160 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634, 915 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 42.31% ஆகும்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4,363,035 என்பதுடன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 32.76% ஆகும்.
இதேவேளை சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2,299,767 (17.27%) மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் பெற்றுக் கொண்ட வாக்குகள் 226,343 (1.7%) ஆகும்.
இதேவேளை திலித் ஜெயவீர 122,396 (0.92%) வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.