மக்கள் சுகாதாரப் பரிசோதகர் தீபால் ரொஷான் குமாரவின் கொலைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கொலைகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘உரகஹ இந்திக’ என அழைக்கப்படும் இந்திக சம்பத், டுபாயில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.










