15 வயதுடைய பாடசாலை மாணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை ஏனைய கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை – சிப்பிக்குளம் பகுதியில் உள்ள பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு அருகில் குறித்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் நடத்திய தாக்குதலில் 15 வயது மாணவன் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்









