நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ஹட்டன் டிக்கோயா பகுதியில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது..
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஹட்டன் டிக்கோயா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீடுகளில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 100இற்;கும் மேற்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுபபி வைக்கப்படுவார்கள் என தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹட்டன் – டயகம பிரதான வீதியில் போக்குவரத்து சில நேரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததாக ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்