விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை அல் பஹ்ரியா மாகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

விளையாட்டு அபிவிருத்தி மேம்பாடு, உடற்கட்டமைப்பு வளர்ச்சத் திறன் அபிவிருத்தி போன்ற நோக்கங்களுக்காக உடல் வலுவூட்டல் உபகரணங்கள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

Shanakiya Rasaputhiran

இந் நிகழ்வில் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் யூ.எல். சிபான் உயர்கல்வி பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம் ரியால், ஏ.டபிள்யூ அசாட்காண் மற்றும் பிரிலியண்ட் விளையாட்டுக் கழக தலைவரும் கல்முனை 12ஆம் வட்டார அமைப்பாளருமான எம். எஸ்.எம் பழீல்,பிரிலியண்ட் விளையாட்டுக் கழக செயலாளர் எஸ்.டி.எம் பஸ்வாக்,பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.எம் ஹாஜா,பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர் ஏ.எல்.எம் நபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad