டிக்கோயா கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையிலிருந்து நோர்வூட் ஸ்டொக்ஹோம் தோட்டத்திற்குச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று திங்கட் கிழமை மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மூன்று நோயாளர்களை ஏற்றிச் செல்லும் போதே நோர்வூட் பகுதியில் பெய்த கன மழையினால் அம்பியூலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது அம்பியூலன்சில் மூன்று பேர் இருந்ததாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்