கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவரது கை துண்டாக்கப்பட்டுள்ளது.
மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம், எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி, மோட்டார் சைக்கிளை நீண்ட தூரம் இழுத்து சென்றது.
இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞனின் கை, முழங்கைக்கு கீழ் துண்டாடப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









