வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் பயன்கள்

🍌வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற  உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

🍌தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்க கனிந்த பழத்தை  சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

🍌மூல நோய் உள்ளவர்கள் வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் பாதிப்பு குறையும்.

🍌 இரவு உணவுக்குப்பின் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மூல நோய் தணியும்.

🍌நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஆணும், பெண்ணும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தை பேறு  கிடைக்கும்

🍌நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவது நல்லது. இதனால் மலம் நன்றாக வெளியேறும். மேலும் பித்த பிணிகள் நீங்கும்.

🍌உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவது இரவு உணவுக்குப் பதில் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம்கழித்து வெந்நீர் அருந்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பை குறையும்.

🍌வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.

🍌வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, லுடீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

🍌பற்களை வெண்மையாக்க வாழைப்பழத்தோல் மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத் தோலின் உட்புறப் பகுதியை சுமார் 2 நிமிடங்களுக்கு மெதுவாகத் தேய்த்தால் பற்கள் வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

🍌வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

🍌வாழைப்பழத்தில் உள்ள இருவிதமான நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

🍌வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு வாழைப்பழங்களை உட்கொள்வது உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவும், மேலும் அதிக வேலை செய்யவும் அனுமதிக்கும்.

🍌மொந்தன் வாழைப்பழம் சாப்பிட்டுவர உடலில் அதிகமாக இருக்கும் வறட்சி தன்மை நீங்கிவிடும். மேலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் வராமல் தடுத்து நிறுத்தும்.

வாழைப்பழம் பயன்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்