வடதமிழகம் உட்பட பல இடங்களில் 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஐந்து தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மே 1 ஆம் திகதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்றும் வட தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட தமிழக மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 102 முதல் 108 டிகிரி ஃபாரனைட் வரையிலும் (38- 42செல்சியஸ்), புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 95 முதல் 102 டிகிரி ஃபாரனனைட் வரையிலும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 9 இடங்களில் 104 ஃபாரனனைட் மேல் வெப்பநிலை பதிவானதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்