லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் இன்று திங்கட்கிழமை காலை முதல் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளன.
இதன்படி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 366 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 464 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபா
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாக பதிவாகியுள்ளது.