இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைக் குறிப்பிட்டுள்ளார்.