மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணியளவில் மோட்டார் வாகனத்தில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டலின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










