அநுராதபுரம், மதவாச்சி – ரம்பேவை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது
ரம்பேவை, வெலியோ சந்தை பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த உறவினர்கள் மூவர், மழை காரணமாக மரம் ஒன்றின் அடியில் ஒதுங்கியிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் ரம்பேவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 61 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்களாவர்.
விபத்தில் காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










