நிலவும் மழைடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று பிற்பகல் 4:00 மணி முதல் நாளை பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.
நிலை 2 – எச்சரிக்கை (அம்பர்) அறிவித்தல்
குறித்த பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி நிலவரத்திற்கு அமைய, பின்வரும் பகுதிகளில் உள்ள மக்கள் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய.
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, எலபாத மற்றும் இரத்தினபுரி.
நிலை 1 – அவதானம் (மஞ்சள்) அறிவித்தல்
பின்வரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, ஹல்தும்முல்லை மற்றும் பசறை.
கேகாலை மாவட்டம்: வரகாப்பொல, ரம்புக்கனை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் கேகாலை.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, மாத்தளை, அம்பன்கங்க கோரளை மற்றும் உக்குவளை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட.
இரத்தினபுரி மாவட்டம்: கொலொன்ன, இம்புல்பே, நிவித்திகலை, வெலிகேபொல, பலங்கொடை, கலவானை, எஹெலியகொட மற்றும் அயகம.
குறித்த பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல் மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் போன்ற அபாயகரமான நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் பாதுகாப்புப் பிரிவினரும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.










