-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் நிலையப் பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதான வீதியில் வைத்து இன்று திங்கட்கிழமை காலை குளிர்பான தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.
இன,மத பேதங்களுக்கு அப்பால் வீதியால் பயணித்த பொதுமக்கள் குளிர்பான தன்சலை மகிழ்ச்சியோடு வாங்கி பருகியதை காணமுடிந்தது.