களுத்துறை, வஸ்கடுவ – கபுஹேன பகுதியில் லொறியில் வேலை செய்து கொண்டிருந்த போது மரக்கட்டைகள் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கபுஹேன பகுதியை சேர்ந்த கிரிஷாந்த குமார (வயது – 48) என்பவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவர் எகொட உயன பகுதியில் லொறியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த போது மரக்கட்டைகள் விழுந்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்