இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், விஜித ஹேரத்தைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாகவும், இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளின் சங்கத்தின் (IORA) அடுத்தடுத்த சந்திப்புகளின்போது மேலும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் ‘அயல்நாடுகளுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் ‘விஷன் மஹாசாகர்’ (Vision MAHASAGAR) முன்முயற்சி குறித்தும் தனது பதிவில் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.











