மதுபானத்தின் விலையை குறைக்கும் நோக்கில் மதுவரி குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறான திருத்தம் தொடர்பான அறிவிப்போ அல்லது அறிவுறுத்தலோ தமது திணைக்களத்துக்கு வழங்கப்படவில்லை என மதுவரி திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மதுவரி விகிதங்கள் அல்லது மதுபானங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.