நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமியின் கிழக்கின் சமர் கிரிக்கட் போட்டிகள் மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்ரன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமியின் ஸ்தாபகரும் தலைவருமான பெனடிக் மோசஸ் தலைமையில் இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
3வது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெறும் இரு நாட்களைக் கொண்ட இப்போட்டிகளில் 16, 14, மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களின் விறுவிறுப்பான போட்டிகள் இடம்பெற்றன.
திருகோணமலையைச் சேர்ந்த லெஜன்ட்ரீ கிரிக்கெட் அக்கடமி, மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி அணியினருக்கும் இடையிலான பலப்பரீட்சை இடம் பெற்றன.
இந் நிகழ்வில் மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அபுர் ரிஷான், இலங்கை விமானப்படை பொறியாளர் வி.விஜிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

