ஹங்கம, கலமெட்டியா கடற்கரையில் நேற்று சனிக்கிழமை கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று மாணவர்களின் உடல்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.
தங்கல்லேவில் உள்ள பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர், இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டன.
உயிரிழந்த மாணவர்கள் ஹங்கம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.