-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள, கிலன்டில் தோட்ட நடு தோட்ட பிரிவில், மண் திட்டு சரிந்து விழுந்ததில், மதகுரு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விஸ்தரிப்பு செய்ய தளம் வெட்டி எடுத்து கொண்டு இருக்கும் வேளையில், பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளது. இதன்போது மண் திட்டுக்குள் அகப்பட்டு கொண்ட போதகர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெரிய நடுதோட்ட கிறிஸ்தவ மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் (வயது 41) என்ற ஒரு குழந்தையின் தந்தை என கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.