மட்டக்களப்பு நாவலடியில் இனம்தெரியாத விசமிகளால் வலைச்சாத்து திருடப்பட்டுள்ளதுடன் வள்ளம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக நாவலடி தனியார் வாடி உரிமையாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குறித்த தனியார் வாடி உரிமையாளர் மழை காரணமாக வள்ளம் மற்றும் வலைச்சாத்து என்பவற்றை பாதுகாப்பாக கரையில் கட்டி வைத்திருந்த நிலையில் சில இனம் தெரியாத விசமிகள் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு இலட்சம் பெறுமதியான வலை திருப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.